உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பூஞ்சேரி சந்திப்பு பகுதியில் முட்புதர் அகற்றி பராமரிப்பு

பூஞ்சேரி சந்திப்பு பகுதியில் முட்புதர் அகற்றி பராமரிப்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி சந்திப்பு வழியே, உள்ளூர் வாகனங்கள், கிழக்கு கடற்கரை சாலை, புதுச்சேரி சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, திருக்கழுக்குன்றம் சாலை வழியே வாகனங்கள் செல்கின்றன.இச்சந்திப்பில், புதுச்சேரி சாலை வளையும் இடத்தில், முட்புதர் அடர்ந்து வளர்ந்து, சாலையின் மைய பகுதி வரை நீண்டிருந்தது.இருசக்கர வாகன பயணியர், கனரக வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கும்போது, முட்கள் உடலில் கிழித்து பாதிக்கப்பட்டனர். இரவில் இருள் சூழ்ந்து, முட்புதரில் சிக்கி காயமுற்றனர்.தானியங்கி சிக்னல், மின் கம்பம் ஆகியவற்றையும் முட்புதர் சூழ்ந்திருந்தது. இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.அதைத் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலைப் பணி ஒப்பந்த நிறுவனத்தினர், முட்புதரை அகற்றி, சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சாலையில் ஆங்காங்கே ஏற்பட்டிருந்த பள்ளங்களையும் சீரமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை