உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நிறுத்தங்களில் நிற்காத பேருந்துகள்; மதுராந்தகத்தில் விபத்து அபாயம்

நிறுத்தங்களில் நிற்காத பேருந்துகள்; மதுராந்தகத்தில் விபத்து அபாயம்

மதுராந்தகம்: மதுராந்தகம் பகுதி சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கக்கிலப்பேட்டை அமைந்துள்ளது. கக்கிலப்பேட்டை பகுதியில், சாலையின் இரு மார்க்கத்திலும், பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.இதில், மதுராந்தகத்திலிருந்து கக்கிலப்பேட்டை வழியாக வேடந்தாங்கல், உத்திரமேரூர் பகுதிக்கு செல்லும் புறவழிச்சாலையில், ஒரு பயணியர் நிழற்குடை உள்ளது.இந்த புறவழிச்சாலை முழுதும் தனியார் வாகனங்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.அதேபோல், மறு மார்க்கத்தில் செங்கல்பட்டில் இருந்து வரும் அனைத்து தனியார் மற்றும் அரசு பேருந்துகள், கக்கிலப்பேட்டையில் உள்ள நிழற்குடையில் நிறுத்தப்படுவதில்லை.மாறாக, மதுராந்தகத்திலிருந்து கக்கிலப்பேட்டை வழியாக, திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலை சந்திப்பில் பேருந்துகள் நிறுத்துகின்றனர்.இதனால், சாலையை கடப்பவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. சில சமயங்களில், விபத்தில் சிக்கி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.சாலையிலேயே பேருந்துகளை நிறுத்தி பயணியரை ஏற்றிச் செல்வதால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதைத் தவிர்க்கும் விதமாக, கக்கிலப்பேட்டை, கருங்குழி போன்ற பகுதிகளில், புறவழிச்சாலையில் உள்ள நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்தி சென்றால், விபத்துகள் தவிர்க்கப்படும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி