குடிநீர் வழங்கும் இயந்திரம் பழுது நீக்கப்படுமா?
அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் பேரூராட்சி அலுவலகம் அமைந்துள்ள வளாகப் பகுதியினுள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டு, மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.கடந்த 2018ல், 4 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டது. இங்கு, 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் கேன் நிரப்புவதற்கு 6 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நாள்தோறும் 3,500 - 4,000 லிட்டர் தண்ணீர் விற்பனை செய்யப்பட்டு வந்தது.தற்போது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம், பழுது காரணமாக, சில நாட்களாக, குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.எனவே, பேரூராட்சி நிர்வாகத்தினர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரத்தை, பழுது நீக்கி, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.