உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு அருகே தீப்பற்றி எரிந்த கார்

செங்கல்பட்டு அருகே தீப்பற்றி எரிந்த கார்

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னிவளவன். இவர், வி.சி., கட்சி செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலராக உள்ளார்.நேற்று முன்தினம் இரவு, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து,'பார்ச்சூன்' காரில் மதுராந்தகம் நோக்கி, கட்சி நிர்வாகிகளுடன் சென்றார்.காரை, செய்யூரைச் சேர்ந்த ராஜா,38, என்பவர் ஓட்டினார்.செங்கல்பட்டு அருகில், ஜி.எஸ்.டி., சாலையில் சென்ற போது, காரின் முன்பக்கத்தில் இருந்து புகை வந்துள்ளது. சக வாகன ஓட்டிகள் இதுகுறித்து கூறியதும் காரை நிறுத்தி, அதில் இருந்த 7 பேரும் கீழே இறங்கியுள்ளனர்.அப்போது, தீ கார் முழுதும் பரவி எரிந்தது. இதையடுத்து, அங்கிருந்தோர் உதவியுடன், தீயை அணைத்துள்ளனர். தகவலின்படி வந்த செங்கல்பட்டு தீயணைப்பு வீரர்கள், 'பேட்டரி' பகுதியில் எரிந்த தீயை அணைத்தனர். செங்கல்பட்டு நகர போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை