உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அரசு பள்ளியில் நுாற்றாண்டு விழா

அரசு பள்ளியில் நுாற்றாண்டு விழா

சூணாம்பேடு, சூணாம்பேடு பஜார் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.கடந்த 1923ம் ஆண்டு ஆரம்ப பள்ளியாக துவங்கப்பட்ட இந்த பள்ளி, நாளடைவில் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, தற்போது நுாறு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.இந்நிலையில், பள்ளியின் நுாற்றாண்டு விழா, நேற்று நடந்தது. இதில் கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள், நுாற்றாண்டு வளைவு திறப்பு, மரக்கன்றுகள் நடுதல், பட்டிமன்றம் உள்ளிட்டவை நடந்தன.பின், கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !