உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காலநிலை இயக்க குழு உதவியாளர் பணி வாய்ப்பு

காலநிலை இயக்க குழு உதவியாளர் பணி வாய்ப்பு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட காலநிலை மாற்ற இயக்கக் குழுவிற்கு, தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:தமிழகம் போன்ற கடலோர மாநிலத்திற்கு, காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்த்துப் போராடுவதும், தணிப்பதும் மிக முக்கியமானது. இதற்குத் தேவையான நடவடிக்கையை எடுக்க, அரசு காலநிலை மாற்ற தழுவல் மற்றும் தகவமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, தமிழக காலநிலை மாற்ற இயக்கத்தை துவங்கியுள்ளது.செங்கல்பட்டு மாவட்ட காலநிலை மாற்ற இயக்கக் குழு, கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது. இக்குழுவிற்கு அலுவலக பணிகள் மேற்கொள்ள, தொழில்நுட்ப உதவியாளர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.இப்பணியிடம், ஓராண்டிற்கு முற்றிலும் தற்காலிகமானது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கூடுதல் தகுதியாக தட்டச்சுக் கல்வியில், தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட காலநிலை இயக்கக் குழுவிற்கு, வரும் செப்., 11ம் தேதி மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ