உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 4வது மாடியிலிருந்து குதித்த கல்லுாரி மாணவர் காயம்

4வது மாடியிலிருந்து குதித்த கல்லுாரி மாணவர் காயம்

மறைமலை நகர்:ஆந்திர மாநிலம் செகந்திராபாத் பகுதியைச் சேர்ந்தவர் கொண்டா ஸ்ரீனிவாச நிக்கில்,20. மறைமலை நகர் அடுத்த பொத்தேரி, அப்போட் வேல்யூ அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, அங்குள்ள தனியார் பல்கலையில் பி.டெக்., நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.இந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 31ம் தேதி, தாம்பரம் மாநகர போலீசார் கஞ்சா தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, ஸ்ரீனிவாச நிக்கிலிடமும் கஞ்சா தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.இதனால் மன அழுத்தத்தில் இருந்த ஸ்ரீனிவாச நிக்கில், நேற்று இரவு அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்தார். படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அதே பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மறைமலை நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ