மேலும் செய்திகள்
இலவச வேட்டி - சேலை தரவில்லை பொதுமக்கள் அதிருப்தி
14-Feb-2025
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.செங்கல்பட்டு அடுத்த மலையடி வேண்பாக்கம் பகுதியில், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது. இந்நிலையத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும், இலவச சைக்கிள் அரசு சார்பில் வழங்கப்படுகிறது.இந்த ஆண்டு, 410 மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது. இதனால், தொழிற்பயிற்சி வளாகத்தில், சைக்கிள் பொருத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.இப்பணி முடிந்தவுடன், சைக்கிள்கள் அனைத்தும் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என, ஊழியர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், வளாகத்தில் திறந்த வெளியில், புதிய சைக்கிள்கள் நிறுத்தப்பட்டு உள்ளதால், வெயில் மற்றும் மழையில் பாதிக்கப்படுகின்றன.எனவே, புதிய சைக்கிகள் அனைத்தையும் பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
14-Feb-2025