மேலும் செய்திகள்
மழைநீர் வடிகால் பணி ஸ்ரீபெரும்புதுாரில் தீவிரம்
04-Sep-2024
கூடுவாஞ்சேரி:நந்திவரத்தில் உள்ள வண்டலூர் தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள சாலையில், புதிய மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.மழை காலங்களில் பாரி தெரு, என்.எஸ்.கே.தெரு, முத்து மாரியம்மன் கோவில் தெரு, காமராஜபுரம் போன்ற பகுதியிலிருந்து, வரும் மழைநீர் செல்ல முடியாமல், சாலைகளில் தேங்குவதால், அப்பகுதியினர் கடும் அவதிப்பட்டு வந்தனர்.இதை தொடர்ந்து, பாரி தெரு, என்.எஸ்.கே.தெரு, முத்துமாரியம்மன் கோவில் தெரு, காமராஜபுரம் ஆகிய பகுதிகளில், ஏற்கனவே இருந்த மழைநீர் வடிகால்வாயை துர்வாரி, அகலப்படுத்தும் பணி சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது.வண்டலூர் தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள சாலையில், நந்திவரம் அரசு மருத்துவமனை சுற்றுச்சுவரை ஒட்டி, 27 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. காமராஜபுரத்தில் இருந்து வரும் மழை நீரை, புதிய கால்வாயில் இணைத்து, பின், ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஒரு மாதத்திற்குள் நிறைவடையும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
04-Sep-2024