உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / போதையில் துாங்கியவர் மரணம்

போதையில் துாங்கியவர் மரணம்

நீலாங்கரை, கடலுாரைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வன்,50 என்பவர், சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் நடைபெறும் கட்டுமான பணித்தளத்தில் ஓட்டுநராக பணிபுரிந்தார்.நேற்று முன்தினம் இரவு, அங்கு தங்கி இருந்த இடத்தில் மது அருந்திவிட்டு, உடன் இருந்தவரிடம் சாப்பாடு வாங்கிச் வர சொல்லிவிட்டு, அங்கேயே துாங்கிவிட்டார்.சாப்பாடு வாங்கி வந்து எழுப்பிய போது, அவர் எழுந்திருக்கவில்லை. தகவலின்படி, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சென்று பரிசோதித்தபோது இறந்து விட்டதாகக் கூறினர். நீலாங்கரை போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !