உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இ.சி.ஆர்., சாலையில் மண் குவியல் பாதை தெரியாமல் டிரைவர்கள் திணறல்

இ.சி.ஆர்., சாலையில் மண் குவியல் பாதை தெரியாமல் டிரைவர்கள் திணறல்

செய்யூர், மாமல்லபுரம்- - புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையை, நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி, கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது.முதற்கட்டமாக, மாமல்லபுரம் -- மரக்காணம்இடையே, சாலைவிரிவாக்கப் பணி நடந்து வருகிறது.இச்சாலை விரிவாக்கத் திட்ட பணிகளுக்காக, தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டு, தற்போது சாலை அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன.சாலை தாழ்வாக உள்ள பகுதிகள், பாலங்கள்அமையும் இடங்களில், பொதுப்பணித் துறைகட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏரிகளில், அரசு அனுமதியுடன் மண் எடுத்துவரப்பட்டு, சாலை உயர்த்தி அமைக்கப்பட்டு வருகிறது.செய்யூர் அடுத்தநல்லுார் கிராமத்தில்,செய்யூர் - போளூர் சாலை ஓரத்தில் உள்ள ஏரியில் இருந்து மண் எடுக்கும் பணி, சில நாட்களுக்கு முன் துவங்கியது.ஏரியில் இருந்து மண் எடுத்துச் செல்லும் லாரிகள், அதிக பாரம் ஏற்றிக்கொண்டு, தார்பாய் மூடாமல் செல்வதால், லாரியில் இருந்து சிதறும் ஏரி மண், சாலையில் குவிந்துள்ளது.ஏரி மண் களிமண் தன்மை உடையதால், சாலையில் ஒட்டிக்கொண்டு, வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.மேலும், மழை பெய்தால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையில் குவிந்துள்ள மண்ணில் வழுக்கி, விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது.சாலையில் குவிந்துள்ள மண் காற்றில் பறப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.ஆகையால், துறைசார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையில் உள்ள களிமண் குவியல்களை தினசரி அகற்றி,மண் ஏற்றிச் செல்லும்லாரிகளில் தார்பாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ