உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கிராம சபை நடத்த எதிர்பார்ப்பு

கிராம சபை நடத்த எதிர்பார்ப்பு

மாமல்லபுரம்:ஊராட்சிப் பகுதிகளில், குடியரசு நாளான ஜன., 26ம் தேதி, தொழிலாளர் நல தினமான மே 1ம் தேதி, சுதந்திர தின நாளான ஆக., 15ம் தேதி, காந்தி ஜெயந்தி நாளான அக்., 2ம் தேதி மற்றும் உள்ளாட்சி தினமான நவ., 1ம் தேதி ஆகிய நாட்களில், கிராம சபை கூட்டம் நடத்தப்படும்.மத்திய, மாநில அரசு திட்டங்கள், ஊராட்சி வளர்ச்சிப் பணிகள், மக்களின் கோரிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானம் இயற்றப்படும்.கடந்த நவ., 1ம் தேதி, கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். இந்நாள், தீபாவளி பண்டிகைக்கு மறுநாளாக அமைந்ததால், கூட்டத்தை ஒத்திவைக்குமாறு, ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பினர், அரசிடம் வலியுறுத்தினர்.அரசும் பரிசீலித்து, மறு தேதி அறிவிப்பின்றி, இக்கூட்டத்தை ஒத்திவைத்தது. இக்கூட்டத்தை மீண்டும் நடத்த வேண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை