உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காந்திநகர் - முருக்கஞ்சேரி இடையே தார் சாலை அமைக்க எதிர்பார்ப்பு

காந்திநகர் - முருக்கஞ்சேரி இடையே தார் சாலை அமைக்க எதிர்பார்ப்பு

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே காந்தி நகரிலிருந்து முன்னுாத்திக்குப்பம், கத்திரிச்சேரி வழியாக, முருக்கஞ்சேரி வரை செல்லும் 6 கி.மீ., நீளமுள்ள மாநில நெடுஞ்சாலை உள்ளது.இச்சாலையைப் பயன்படுத்தி பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் வெளியூர் பகுதிக்கு வேலைக்கு செல்லும் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் என, மதுராந்தகம் டவுன் பகுதிக்கு நாள்தோறும் 500க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த சாலை, நாளடைவில் பராமரிப்பின்றி, குண்டும், குழியுமாக மாறியுள்ளது.புதிதாக இச்சாலையை மேம்படுத்தும் பணிகள், இதுவரை ஏதும் நடைபெறவில்லை.அதனால், சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைகின்றனர். சாலை சேதமடைந்து உள்ளதால், ஆட்டோக்களில் செல்ல கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவசர காலங்களில், ஆம்புலன்ஸ் கூட இங்குள்ள கிராம பகுதிகளுக்கு உடனடியாக வர முடியாத சூழல் உள்ளது. இதனால், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணியரை ஷேர் ஆட்டோக்கள் வாயிலாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.சாலையை சீரமைத்து தரக் கோரி, துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் கலெக்டரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிதாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ