உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சதுரங்கப்பட்டினம், தேன்பாக்கத்தில் மீன் சந்தைகள் அமைக்க எதிர்பார்ப்பு

சதுரங்கப்பட்டினம், தேன்பாக்கத்தில் மீன் சந்தைகள் அமைக்க எதிர்பார்ப்பு

சதுரங்கப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் ஊராட்சியில் வடக்கு, தெற்கு சதுரங்கப்பட்டினம், மெய்யூர் ஆகிய பகுதிகளில், மீனவர்கள் வசிக்கின்றனர்.வாழ்வாதார தொழிலாக, கடலில் மீன் பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். பெரும்பாலானோர், கல்பாக்கம் அணுசக்தி தொழில் வளாகம் செல்லும் சாலை பகுதியில், டச்சுக்கோட்டை அருகில் கீற்று பந்தலில் மீன் விற்கின்றனர்.அணுசக்தி பகுதிக்கான சாலை என்பதால், அணுசக்தி துறை ஊழியர்கள், காலை, மாலை நேரத்தில் வாகனங்களில் செல்கின்றனர்.உள்ளூர் மக்களும் இச்சாலையில் செல்கின்றனர். மீன் வாங்க வருவோர், அவர்களின் இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி, விபத்து அபாயத்துடன் கடை முன் நிற்கின்றனர்.இவர்களின் மீது, மற்ற வாகனங்கள் மோதும் அபாயம் உள்ளது. மேலும் இவ்வழியே செல்வோர் மீன் நாற்றம், மீன் கழுவும் நீர் எச்சம் ஆகியவற்றால், முகம் சுளிக்கின்றனர். இதை தவிர்க்க ஊராட்சி நிர்வாகம், தனி இடத்தில் சுகாதாரமான மீன் மார்க்கெட் அமைக்க வேண்டுமென, அப்பகுதிவாசிகள் வலியுறுத்துகின்றனர்.இதேபோல், சூணாம்பேடு அடுத்த கொளத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட தேன்பாக்கம் கிராமத்தில், பல ஆண்டுகளாக கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில், மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.இங்கு 30க்கும் மேற்பட்ட மீன் கடைகள் அமைக்கப்பட்டு கடப்பாக்கம் குப்பம், ஆலம்பரைக்குப்பம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் பிடிக்கப்படும் மீன், இறால், நண்டு போன்ற கடல்சார் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.மீன் கடைகள் வாயிலாக சூணாம்பேடு, கொளத்துார் போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், பயனடைந்து வருகின்றனர்.இப்பகுதியில் மீன் விற்பனைக்கூடம் வசதி இல்லாததால், தனியார் இடத்தில் தினசரி வாடகைக்கு கடைகள் அமைக்கப்பட்டு, மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.எனவே ஊராட்சி நிர்வாகம், ஒழுங்குமுறை மீன் விற்பனைக்கூடம் அமைத்து, அதன் வாயிலாக ஊராட்சிக்கு வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை