உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / முதல்வர் கோப்பை போட்டி கால அவகாசம் நீட்டிப்பு

முதல்வர் கோப்பை போட்டி கால அவகாசம் நீட்டிப்பு

செங்கல்பட்டு : முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளுக்கு முன்பதிவு செய்ய, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:இந்த ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள், மாணவ - மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நடத்தப்பட உள்ளன.இவர்களுக்கு, ஐந்து பிரிவுகளில், 27 விளையாட்டு போட்டிகள், மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டிகள் வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ளன. இதில், 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லுாரி மாணவர்களுக்கும், 15 வயது முதல் 35 வயது வரை பொது பிரிவினருக்கும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளும், அரசு ஊழியர்களும் பங்கேற்கலாம். ஆர்வம் உள்ளவர்கள், https;//sdat.tn.gov.inஎன்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.வரும் செப்., 2ம் தேதி வரை, முன்பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை, 74017 03461 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ