உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தனியார் தொழிற்சாலையில் தீ தடுப்பு விழிப்புணர்வு

தனியார் தொழிற்சாலையில் தீ தடுப்பு விழிப்புணர்வு

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி, சிப்காட் தொழிற்சாலையில் உள்ள வாகனங்கள் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில், தீ விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது.இதில், மறைமலை நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் பங்கேற்று, தீ தடுப்பு ஒத்திகை பயிற்சியை, பெண் தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் விளக்கினர்.மேலும், தீ விபத்து காலங்களில், எவ்வாறு துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை மீட்க வேண்டும்; தொழிற்சாலைகளில் உள்ள தீ தடுப்பான்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பன குறித்து, தீயணைப்பு வீரர்கள் தொழிலாளர்களுக்கு விளக்கினர்.இந்த நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ