உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குரூப் - 2 தேர்வு 7,299 பேர் ஆப்சென்ட்

குரூப் - 2 தேர்வு 7,299 பேர் ஆப்சென்ட்

செங்கல்பட்டு:தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் குரூப் - 2, 2ஏ தேர்வு, தமிழகம் முழுதும் நேற்று நடந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய தாலுகாவில், 81 தேர்வு மையங்களில், 21,599 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.இதில், 14,300 பேர் தேர்வு எழுதினர். 7,299 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களுக்கு, செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய கருவூலங்களில் இருந்து, வினாத்தாள்களை மூன்று தாசில்தார்கள், வாகனம் மூலம் எடுத்துச் சென்றனர். தேர்வு மையங்களில், வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் போலீசார் என, 3,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.செங்கல்பட்டு சப்- - கலெக்டர் நாராயணசர்மா, தாம்பரம், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர்கள், தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் என, மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ