உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / உயர் ரத்த அழுத்தம் குறித்து விழிப்புணர்வு மணல் சிற்பம்

உயர் ரத்த அழுத்தம் குறித்து விழிப்புணர்வு மணல் சிற்பம்

மாமல்லபுரம்,:உலக சுகாதார அமைப்பின் சார்பில், உலக உயர் ரத்த அழுத்த தினம், கடந்த 2006ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் மே 17ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.இதுகுறித்த விழிப்புணர்வை, செட்டிநாடு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மாமல்லபுரம் கடற்கரையில், மணல் சிற்பம் வாயிலாக ஏற்படுத்தியது.மருத்துவ நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், செட்டிநாடு ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்ட்ஸ் மாணவர்கள், கடற்கரையில், இதயத்தின் முப்பரிமாண மணல் சிற்பம் செய்து விழிப் புணர்வு ஏற்படுத்தினர்.அப்போது, நம் சராசரி ரத்த அழுத்தம் 120/80, இதய நலனிற்கு ரத்த அழுத்தம் சராசரியை விட உயராமல் கட்டுப்படுத்தும் நடைமுறைகள் குறித்து, சுற்றுலா பயணியரிடம் விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ