உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மானாமதி சாலை படுமோசம் வனத்துறை மவுனம் கலையுமா?

மானாமதி சாலை படுமோசம் வனத்துறை மவுனம் கலையுமா?

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில், திருப்போரூர் - -செங்கல்பட்டு சாலையில் இருந்து கொட்டமேடு - -மானாமதி 4 கி.மீ., சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது.மானாமதி சுற்றுவட்டார கிராம மக்கள் கூடுவாஞ்சேரி, தாம்பரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு சென்று வர இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.இச்சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ளாமல் உள்ளது. மேலும், சாலையின் இருபுறமும் முட்புதர்கள் சூழ்ந்துள்ளது.இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு சாலைகளை சீரமைக்க, அத்துறை அனுமதி வழங்கியுள்ளது.அதேபோல, கொட்டமேடு - -மானாமதி சாலையையும் சீரமைக்க உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ