உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஏரி உபரிநீர் கால்வாயை சீரமைத்து தடுப்பணை அமைக்க எதிர்பார்ப்பு

ஏரி உபரிநீர் கால்வாயை சீரமைத்து தடுப்பணை அமைக்க எதிர்பார்ப்பு

செய்யூர் : செய்யூர் அருகே உள்ள சிறுவங்குணம், கீழச்சேரி, திருப்புறக்கோவில், செங்காட்டூர் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர், படிப்படியாக உபரிநீர் கால்வாயில் இணைந்து, இறுதியாக கழிவெளியில் சேர்ந்து கடலில் கலக்கிறது.இந்த உபரிநீர் கால்வாய், இப்பகுதியில் உள்ள பெரும்பாலான ஏரிகளின் நீர்வரத்து கால்வாயாகவும் உள்ளது. 10 கி.மீ., நீளமுடைய கால்வாய், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.பல ஆண்டுகளாக கால்வாய் சீரமைக்கப்படாமல் உள்ளதால், மரம், செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது.மழைக்காலங்களில், இதனால் போதிய தண்ணீர் செல்ல முடியாமல், வயல்வெளிகள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்படுகின்றன.ஆனால், கோடைகாலத்தில் நிலத்தடி நீர்மட்டம் படிப்படியாக குறைந்து, விவசாயம் செய்ய தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதாக, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, விவசாயிகளின் நலன் கருதி, மழைகால்களில் தடையின்றி தண்ணீர் செல்ல, கால்வாயை துார்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும்.கோடைகாலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதை தடுக்க, கால்வாய் நடுவே தடுப்பணைகள் அமைத்து, வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி