மேலும் செய்திகள்
செங்கையில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்
08-Sep-2024
மாமல்லபுரம் : செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட பகுதிகளில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொது இடங்களில், கடந்த செப்., 7ம் தேதி, பிரமாண்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்தனர். விநாயகருக்கு தினசரி வழிபாடு நடத்தப்பட்டது.செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள், வரும் 15ம் தேதி, மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட்டன. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 47 சிலைகள், மாமல்லபுரம் கடற்கரையில் நேற்று கரைக்கப்பட்டன.திருப்போரூர் ஒன்றியத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள், கோவளம் கடற்கரையில் கரைப்பதற்காக, பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ஏராளமான விநாயகர் சிலைகள், பாதுகாப்பாக கடலில் கரைக்கப்பட்டன. எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்க, போலீஸ் பாதுகாப்பு இருந்தது.மதுராந்தகம், அச்சிறுபாக்கம், சித்தாமூர், கூவத்துார், பவுஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள், கடப்பாக்கம், கடலுார்குப்பம், வடபட்டினம், தழுதாளிகுப்பம் உள்ளிட்ட கடற்கரைகளில், போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.கடப்பாக்கத்தில் 75, தழுதாளிகுப்பத்தில் 45, கடலுார்குப்பத்தில் 19, வடபட்டினத்தில் 3 என, 142 சிலைகள், கடப்பாக்கம் கடற்பகுதியில், நேற்று கரைக்கப்பட்டன.
08-Sep-2024