உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆன்லைன் வாயிலாக பேருந்து முன்பதிவு காஞ்சிபுரம் மண்டல நிர்வாகம் ஏற்பாடு

ஆன்லைன் வாயிலாக பேருந்து முன்பதிவு காஞ்சிபுரம் மண்டல நிர்வாகம் ஏற்பாடு

காஞ்சிபுரம்:தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கோட்டம், காஞ்சிபுரம் மண்டலம் சார்பில், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, வேலுார்,செங்கல்பட்டு, திருவண்ணா மலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட வெளிமாவட் டங்களுக்கும், திருச்சி, பெங்களூரூ, திருப்பதிஉள்ளிட்ட தொலைதுார இடங்களுக்கும் அரசு பேருந்து இயக்கப்படுகிறது.இதில், விடுமுறை, முகூர்த்தம் உள்ளிட்ட விசேஷ நாட்களில், ஒரே நேரத்தில் பலரும் வெளியூர் செல்வதால், பேருந்துகளில் இடம் கிடைப்பது அரிதாக உள்ளது. நிலையத்திற்கு பேருந்து வரும்போதே முண்டியடித்தபடி பேருந்தில் இடம்பிடிக்க வேண்டிய நிலை உள்ளதால், முதியோர், பெண்கள் சிரமப்பட்டு வந்தனர்.எனவே, இப்பேருந்துகளில் 'ஆன்லைன்' வாயிலாக முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்த வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், காஞ்சி புரம் மண்டலம் சார்பில், பெங்களூரூ, தாம்பரம், வேலுார், திருப்பதி, திருச்சி, காஞ்சிபுரம் பேருந்து நிலையங்களில் இருந்து புறப்பட்டுச்செல்லும் அரசு பேருந்துகளில் தற்போது, 'ஆன்லைன்' வாயிலாக முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இப்பேருந்துகளில் பயணம் செய்ய விரும்புவோர், www.tnstc.inஎன்ற இணையதளம் வாயிலாக முன்புதிவு செய்யலாம் என, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கோட்டம், காஞ்சிபுரம் மண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை