மேலும் செய்திகள்
வில்லியனுார் கோவிலில் உறியடி உற்சவம்
28-Aug-2024
உறியடி உற்சவம்
28-Aug-2024
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், ருக்மணி, பாமா சமேத நவநீத கிருஷ்ண சுவாமி கோவில், பஜனை கோவில் என, பிரசித்தி பெற்றது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, 38ம் ஆண்டு உற்சவம் கொண்டாடப்பட்டது.கடந்த ஆக., 26ம் தேதி நவநீத கிருஷ்ணர், சிறப்பு அபிஷேகம் மற்றும் திருமஞ்சன வழிபாடு கண்டு, வாசுதேவர் ஆயர்பாடியில் எழுந்தருளிய திருக்கோல காட்சியுடன் உற்சவம் துவக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, செப்., 5ம் தேதி வரை, தினசரி காலை அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் நடந்தது. மாலை, தினமும் ஒரு திருக்கோல அலங்காரத்தில் அருள்பாலித்தார்.இறுதி நாளான நேற்று முன்தினம் காலை சுவாமி திருமஞ்சனம் கண்டார். மாலை, உறியடி கண்ணன் திருக்கோல கிருஷ்ணர் வீதியுலா சென்றார். இரவு பக்தர்கள் உறியடித்தனர்.
28-Aug-2024
28-Aug-2024