உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகள் பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைப்பு

மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகள் பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைப்பு

சென்னை, சென்னை மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகள் பராமரிப்பை ஆண்டுக்கு, 11.65 கோடி ரூபாய்க்கு, தனியாரிடம் ஒப்படைக்க, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சிக் கூட்டம், ரிப்பன் மாளிகையில் நேற்று, மேயர் பிரியா தலைமையில் நடந்தது. துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.பின், மாநகராட்சி மன்ற கூட்டத்தில், 117 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் சில முக்கிய தீர்மானங்கள்:lசென்னை மெரினா கடற்கரை, 250 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இவை, 7.10 கோடி ரூபாயில் செலவில், ஒரு ஆண்டு கால பராமரிப்புக்கு தனியார்வசம் ஒப்படைக்கப்படும்lபட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட் நகர், புது கடற்கரைகள், 95 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு, 4.55 கோடி ரூபாய் மதிப்பில் ஓராண்டு பராமரிப்புக்கு தனியார்வசம் ஒப்படைக்கப்படும். இவற்றை வட்டார துணை கமிஷனர்கள் கண்காணிப்பர்.அதேபோல், சென்னையில் உள்ள மாநகராட்சி கழிப்பறைகளை, புதுப்பித்து, ஒன்பது ஆண்டுகள் பராமரிக்கும் வகையில், 1,200 கோடி ரூபாய்க்கு தனியாரிடம் ஒப்படைக்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை