உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வாலிபருக்கு கத்திக்குத்து ஒருவர் கைது; ஐவருக்கு வலை

வாலிபருக்கு கத்திக்குத்து ஒருவர் கைது; ஐவருக்கு வலை

திருப்போரூர், திருப்போரூர் அடுத்த சிறுங்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன், 30. இவர், நேற்று முன்தினம் மாலை, வெங்கூரில் பணியாற்றி வரும் மனைவியை அழைத்து வர, இருசக்கர வாகனத்தில் சென்றார்.அப்போது, பக்கத்து கிராமத்தை சேர்ந்த சிலர், கமலக்கண்ணனை மடக்கி, அச்சரப்பாக்கம் வனப்பகுதிக்கு அழைத்து சென்று, கத்தியால் தலை, கை பகுதி களில் வெட்டியுள்ளனர்.தகவல் அறிந்த திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கமலக்கண்ணனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.விசாரணையில், முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்ததாக தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, மயிலை கிராமத்தை சேர்ந்த லோகேஷ்குமாரை, 24, கைது செய்து, தலைமறைவாக உள்ள ஐந்து பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை