உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வாய்க்கால் ஓடையில் பாலம் மானாமதி விவசாயிகள் கோரிக்கை

வாய்க்கால் ஓடையில் பாலம் மானாமதி விவசாயிகள் கோரிக்கை

திருப்போரூர்,மானாமதியில், விவசாயிகள் கடந்து செல்லும் வாய்க்கால் ஓடையில், பாலம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.திருப்போரூர் அடுத்த மானாமதி ஊராட்சியில், கரைமேலழகி அம்மன் கோவில் அருகே வாய்க்கால் செல்கிறது.மானாமதி ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர், ஓடை வழியாக இந்த பகுதியை கடந்து, மற்ற நீர்நிலை வழியாகவும் செல்கிறது.இந்த ஓடையை கடந்து தான், நுாற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் செல்ல முடியும்.மழைக் காலங்களில் தண்ணீர் அதிக அளவில் செல்லும் போது, நிலங்களுக்கு இடு பொருட்கள் கொண்டு செல்ல முடியாமல், விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.மேலும், மழைநீர் குறைந்தாலும், அப்பகுதி குண்டும், குழியுமாக மாறிவிடுகிறது.எனவே, மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ