உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பூதுார் ஊராட்சிமன்ற தலைவரை எச்சரித்த அமைச்சர் அன்பரசன்

பூதுார் ஊராட்சிமன்ற தலைவரை எச்சரித்த அமைச்சர் அன்பரசன்

செங்கல்பட்டு:பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் மீது அதிகாரிகள் கள ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமைச்சர் அன்பரசன் உத்தரவிட்டார்.செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் அன்பரசன், நேற்று பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 376 மனுக்கள் பெற்றார். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.அதன் பின், முருகமங்கலம், திட்ட பகுதியில், 20 பயனாளிகளுக்கு தலா 12.60 லட்சம் ரூபாய் என, 2.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை, மாற்றுத்திறனாளிகள் மூவருக்கு, மூன்று சக்கர சைக்கிள் ஆகியவற்றை வழங்கினார். கலெக்டர் அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* பெண் துணை தலைவர் புகார்மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், எல்.என்.புரம் ஊராட்சி துணைத்தலைவர் சத்யா. ம.தி.மு.க.,வைச் சேர்ந்த இவர், ஊராட்சிக்கு உட்பட்ட பூ முத்துமாரியம்மன் கோவில் தெரு பகுதியில், குடிநீர் கலங்கலாக வருவதாக, அமைச்சர் அன்பரசனிடம் மனு அளித்தார்.அதன் பின் அவர், பெண்களுடன் வெளியே சென்ற போது, பூதுார் ஊராட்சி மன்ற தலைவரான தி.மு.க.,வைச் சுரேஷ், மனு அளித்துவிட்டு வந்த சத்யா தரப்பிடம், 'இங்கு எதற்கு வந்தீர்கள்' எனக் கேட்டுள்ளார். இதில், இருதரப்பிற்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. அதன் பின், சுரேஷ் தன்னை மிரட்டுவதாக, துணைத்தலைவர் சத்யா அமைச்சரிடம் புகார் தெரிவித்தார்.இதையடுத்து, பூதுார் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷை, அமைச்சர் அன்பரசன் எச்சரித்து அனுப்பி வைத்தார். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ