27 நுாலகங்களுக்கு புதிய கட்டடம் செங்கை, காஞ்சியில் பணி துவக்கம்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், 27 நுாலகங்களுக்கு புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.செங்கல்பட்டு மாவட்டத்தில், பொன்விளைந்தகளத்துார், மாமண்டூர், நெடுங்கல், சோத்துப்பாக்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தில், தம்மனுார், வில்லிவலம், மானாமதிகண்டிகை, மொளச்சூர், மேல்மதுரமங்கலம், பிச்சுவாக்கம் ஆகிய பகுதிகளில், புதிய கட்டடங்கள் மற்றும் 17 நுாலகங்களுக்கு இணைப்பு கட்டடம் என, மொத்தம் 27 நுாலகங்களுக்கு புதிய கட்டடம் கட்ட, அரசுக்கு, மாவட்ட நுாலகத்துறை கருத்துரு அனுப்பி வைத்தது.அதன்பின், மத்திய அரசு நிதியின் கீழ், 27 நுாலக கட்டடங்கள் கட்ட, தலா 22 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள் வாயிலாக பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகிறது.இப்பணிகளை இரண்டு மாதங்களுக்குள் முடித்து, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, மாவட்ட நுாலக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.