தொழில் உரிமம் புதுப்பிக்க நகராட்சி கமிஷனர் அறிவிப்பு
கூடுவாஞ்சேரி : நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில், மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இவற்றுக்கு உட்பட்ட பகுதிகளில், சிறு தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் நடத்தி வருவோர், நகராட்சி அலுவலகத்தில் தொழில் உரிமம் பெற வேண்டும்.அதற்காக, நகராட்சி சுகாதார ஆய்வாளர் காளிதாஸிடம் உரிய ஆவணங்களை கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே தொழில் உரிமங்களை பெற்றவர்கள், இந்த மாத கடைசிக்குள் அவற்றை புதுப்பிக்க வேண்டும்.அவ்வாறு புதுப்பிக்க தவறியவர்களிடம், அபராத தொகையும் சேர்த்து வசூல் செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கூடுவாஞ்சேரி நகராட்சி கமிஷனர் தாமோதரன் தெரிவித்துள்ளார்.