மேலும் செய்திகள்
விபத்து அச்சத்தில் வி.ஏ.ஓ., அலுவலகம்
30-Aug-2024
திருப்போரூர்:திருப்போரூரில், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இயங்குகிறது. இதன் கட்டுப்பாட்டில், 17 கிராமங்கள் உள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அலுவலக கட்டடம், நாளடைவில் பலமிழந்தது சுவர் விரிசலடைந்து காணப்படுகிறது.ஆய்வாளர் உள்ளிட்டோர் அபாயத்துடன் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வப்போது மழைநீர் கட்டடத்திற்குள் புகுந்து, பதிவேடுகள் மற்றும் அலுவலக கணினி உள்ளிட்டவற்றை பாதுகாக்க முடியாத நிலை ஏற்படுகிறது.எனவே, புதிய அலுவலக குடியிருப்பு கட்டடம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, தாலுகா அலுவலகம் எதிரே, 21 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. தற்போது, அதற்கான கட்டுமான பணிகள், தீவிரமாக நடந்து வருகின்றன.
30-Aug-2024