உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை அறிவுசார் மையத்தை 8 மணி வரை திறக்க உத்தரவு

செங்கை அறிவுசார் மையத்தை 8 மணி வரை திறக்க உத்தரவு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட அறிவு சார் மையத்தில், கலெக்டர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, இங்கு உள்ள நுாலகத்தில் இருந்து புத்தகங்கள் எடுத்து, குருப் 4 மற்றும் குரூப் 2 போன்ற போட்டி தேர்வுகளுக்கு படிக்கும் மாணவ -- மாணவியருக்கு ஆலோசனை வழங்கினார்.மேலும், குறைகள் இருந்து தெரிவித்தால், அதை மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக சரி செய்து தரப்படும் என தெரிவித்தார்.இது வரை, ஆறு மணி வரை செயல்பட்டு வந்த அறிவுசார் மையத்தை, இரவு எட்டு மணி வரை நீட்டிக்கும்படி, அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.அதே போல, இங்குள்ள பூங்காவை பராமரிக்கவும், மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர், கோடைகாலம் என்பதால், அறைகளுக்கு ஏசி பொருத்தும்படியும் உத்தரவிட்டார்.இந்த ஆய்வின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் உதயகுமார் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை