உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாணவர்களுக்கு பள்ளி திறந்ததும் பாட புத்தகம் வழங்க உத்தரவு

மாணவர்களுக்கு பள்ளி திறந்ததும் பாட புத்தகம் வழங்க உத்தரவு

செங்கல்பட்டு : பள்ளிகள் திறந்தவுடன், மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்க வேண்டும் என, தலைமையாசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், நேற்று உத்தரவிட்டார்.செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம் கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில், 144 அரசு பள்ளிகள், 40 அரசு உதவிபெறும்பள்ளிகள் என, மொத்தம் 184 பள்ளிகள் உள்ளன. வரும் ஜூன் மாதம், 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக, பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.இதைத் தொடர்ந்து, பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் பாட புத்தகங்கள், பேக், காலனி உள்ளிட்ட பொருட்கள் வழங்குவது தொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் தலைமையில், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.மாவட்ட கல்விஅலுவலர் அய்யாசாமி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் உதயகுமார், சிவக்குமார் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள்பங்கேற்றனர். இந்தகூட்டத்தில், பள்ளிகள் திறந்ததும் மாணவர்களுக்கு புத்தகங்கள், பேக்உள்ளிட்டவை வழங்க வேண்டும்.குடிநீர், வகுப்பறைகளில் துாய்மை பணி, கழிப்பறைகள் சுத்தம் செய்து, தண்ணீர் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும்.பள்ளி வளாகத்தில் முட்புதர்கள் இருந்தால், அகற்ற வேண்டும். மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சிகள் நடத்தவேண்டும் உள்ளிட்டபல்வேறு அறிவுரைகளை, தலைமையாசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி