உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லையில் ஆக்கிரமிப்புகள் செப்., 18 - 25ல் அகற்ற உத்தரவு

மாமல்லையில் ஆக்கிரமிப்புகள் செப்., 18 - 25ல் அகற்ற உத்தரவு

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், ஆக்கிரமிப்பு கடைகளால் சாலைகள் குறுகி, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. அதனால், வார இறுதி, அரசு விடுமுறை நாட்களில், சுற்றுலா வாகனங்கள் குவியும் நிலையில், குறுகிய சாலைகளில் நெரிசல் அதிகரிக்கிறது.இதுகுறித்து, தாசில்தார் ராதா, சுற்றுலா அலுவலர் சக்திவேல், பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார், தொல்லியல் அலுவலர் ஸ்ரீதர், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், நெடுஞ்சாலை சாலை ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோருடன், சப் - கலெக்டர் நாராயணசர்மா நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.அதில், மாமல்லபுரம் நகர்ப்பகுதி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய நாட்களை இறுதி செய்து உத்தரவிட்டார்.* செப்., 18ம் தேதி, புறவழி சந்திப்பு மாமல்லன் சிலை - கங்கைகொண்டான் மண்டபம் சந்திப்பு* 19ம் தேதி, கங்கைகொண்டான் மண்டபம் சந்திப்பு - பஸ் நிலையம்* 20ம் தேதி, பஸ் நிலையம் - கடற்கரை* 23ம் தேதி, கங்கைகொண்டான் மண்டபம் சந்திப்பு - கருக்காத்தம்மன் கோவில்* 24ம் தேதி, பஸ் நிலையம் - ஐந்து ரதங்கள்* 25ம் தேதி, மேற்கு ராஜ வீதி, ஒற்றைவாடைத்தெரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை