உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அனுமந்தபுத்தேரி பகுதியில் புறக்காவல் நிலையம் திறப்பு

அனுமந்தபுத்தேரி பகுதியில் புறக்காவல் நிலையம் திறப்பு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சி, அனுமந்தபுத்தேரி, ராமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், வசிப்பிட பகுதிகள் அதிமாக உள்ளன. இப்பகுதியில், அடிக்கடி ரவுடிகள் மோதல் மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.இதை கண்காணிக்க, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டாலும், குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளன.இச்சம்பவங்களை தடுப்பதற்கு, புறக்காவல் நிலையம் அமைக்க, நகர காவல் துறையினர் முடிவு செய்தனர். அதன்பின், நடப்போர் நலவாழ்வு சங்கத்தின் வெள்ளி விழாவையொட்டி, புறக்காவல் நிலையம் கட்டிக்கொடுக்கப்பட்டது.இந்த கட்டடத்தை, எஸ்.பி., சாய் பிரணீத், நேற்று திறந்து வைத்தார். நகரசபை தலைவர் தேன்மொழி, துணைத்தலைவர் அன்புச்செல்வன், டி.எஸ்.பி., புகழேந்தி கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.புறக்காவல் நிலையத்தில், 24 மணி நேரமும், ஒரு போலீசார் பணியில் ஈடுப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார் என, நகர போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !