உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சேதமான சாலை பள்ளங்களால் கவிழ்ந்த சரக்கு வாகனம்

சேதமான சாலை பள்ளங்களால் கவிழ்ந்த சரக்கு வாகனம்

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில், நேற்றுகாலை 'டாடா ஏஸ்' சரக்கு வாகனம், ஒரகடத்தில் இருந்து சிங்கபெருமாள் கோவில் நோக்கிச்சென்றது.தெள்ளிமேடு அருகே வந்தபோது, சாலை நடுவே இருந்த பள்ளத்தில்வாகனம் ஏறி, இறங்கியதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்தது.அவ்வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கிய ஓட்டுனரை மீட்டனர். டிரைவர் காயமின்றி தப்பினார். தொடர்ந்து சாலையில் கவிழ்ந்த வாகனத்தைமீட்டனர்.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:இந்த சாலையில் திருக்கச்சூர், தெள்ளிமேடு, ஆப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை பெயர்ந்து உள்ளது.இச்சாலையில் வழியாகபுதிய வாகனங்கள் செல்லும்போது, ஓட்டுனர்களுக்கு சாலை எங்கு சேதமடைந்துள்ளது என, தெரிவதில்லை. இதனால், அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே, இந்த சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை