உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கோவிலுக்கு செல்லும் வழி ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி பள்ளஈகை மக்கள் மனு

கோவிலுக்கு செல்லும் வழி ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி பள்ளஈகை மக்கள் மனு

செங்கல்பட்டு : பள்ளஈகை கிராமத்தில், கோவிலுக்கு செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வழி ஏற்படுத்தி தரக்கோரி கலெக்டரிடம், கிராமமக்கள் நேற்று மனுஅளித்தனர்.செங்கல்பட்டு மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டம் துவங்கியதும், வண்டலுார் அடுத்த முருகமங்கலம் கிராமத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், மாற்றுத்திறனாளி அமுல் என்பவருக்கு, குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணையை, கலெக்டர் வழங்கினார்.இந்த கூட்டத்தில்,மகளிர் உரிமைத்தொகை, புதிய ரேஷன் கார்டு, நில பட்டா மாற்றம், சாலை, மின்சார வசதி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 363 மனுக்கள் வரப்பெற்றன.இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார்.பள்ளஈகை கிராம மக்கள், கலெக்டரிடம் அளித்த மனு வருமாறு:திருக்கழுக்குன்றம் அடுத்த பள்ளஈகை கிராமத்தில், செல்லியம்மன் கோவில், கங்கையம்மன், முத்துமாரியம்மன் கோவில்கள் உள்ளன. கோவிலுக்கு செல்லும் சாலையை தனிநபர்ஆக்கிரமித்துள்ளார்.இந்த வழியாக, பல ஆண்டுகளாக சென்று, சுவாமி தரிசனம் செய்து வருகிறோம். தற்போது, கோவில் திருவிழா நடைபெற உள்ளதால், சாலை ஆக்கிரமிப்பை அகற்றி, வழி ஏற்படுத்தி தரவேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு மீது விசாரணை செய்து, உடனடி நடவடிக்கை எடுக்க, திருக்கழுக்குன்றம் தாசில்தாருக்கு கலெக்டர்உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ