மேலும் செய்திகள்
கள் இறக்க அனுமதி கோரி மனு
05-Feb-2025
கூவத்துார், செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட கடலோர பகுதிகளான கூவத்துார், கடப்பாக்கம், வடப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பனை மரங்கள் உள்ளன.ஆண்டுதோறும் இப்பகுதியில் பிப்., முதல் ஜூலை மாதம் வரை பனைத் தொழிலாளர்கள், கள் மற்றும் பதநீர் இறக்கி விற்பனை செய்து வருகின்றனர் கள் மற்றும் பதநீர் விற்பதால் கிடைக்கும் வருமானம், இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் பிரதான வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.தற்போது கள் சீசன் துவங்கி உள்ள நிலையில், மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கள் இறக்க எதிர்ப்பு தெரிவித்து, கள் இறக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கள் இறக்கும் பனைமரங்களின் பாளைகள் மற்றும் பானைகளை உடைத்து வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் போலீசாரை கண்டித்தும், கள் இறக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் எனவும் செய்யூர் அடுத்த முகையூர் கிராமத்தில் நேற்று 300க்கும் மேற்பட்ட பனை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
05-Feb-2025