மேலும் செய்திகள்
வேகத்தடை இல்லாத சாலை ஆப்பூரில் விபத்து அபாயம்
24-Aug-2024
மறைமலை நகர்: காயரம்பேடு - மறைமலை நகர் சாலை, 6 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை, கடம்பூர், கலிவந்தப்பட்டு, கருநிலம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.காயரம்பேடு மற்றும் அதனைச்சுற்றி உள்ள கிராம மக்கள், தினமும் மறைமலை நகர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, இந்த சாலை வழியாக, இருசக்கர வாகனங்களில் வேலைக்கு சென்று வருகின்றனர்.இந்த சாலையில், கலிவந்தப்பட்டு சிவன் கோவில் பகுதியில், 1 கி.மீ., துாரம் சாலை மிகவும் சிதிலமடைந்து, குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும், புழுதி அதிக அளவில் பறப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.இது குறித்து, இருசக்கர வாகன ஓட்டிகள் கூறியதாவது:இந்த சாலை சேதமடைந்து, தார் சாலை மண் சாலையாக மாறி உள்ளது. சிறு மழைக்கே தண்ணீர் தேங்கி, சாலையில் உள்ள பள்ளங்கள் தெரிவதில்லை.புதிதாக இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், அதிக அளவில் சிரமமடைந்து சென்று வருகின்றனர். எனவே, இந்த சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
24-Aug-2024