மேலும் செய்திகள்
கரூரில் செப்., 20ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
15-Sep-2024
செங்கல்பட்டு : செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், வரும் 20ம் தேதி நடக்கிறது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை;செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், கலெக்டர் அலுவலக வளாகத்தில், வரும் 20ம் தேதி காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை நடக்கிறது. இதில், 50க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்களில், 5,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில், எட்டாம் வகுப்பு முதல், பொறியியல் பட்டாதாரிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கலாம்.இம்முகாம், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடக்கிறது. மேலும், விபரங்களுக்கு, 044- 2742 6020, 63834 60933, 80567 89359 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
15-Sep-2024