உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குப்பை கிடங்கு அகற்ற கோரி போராட்டம்

குப்பை கிடங்கு அகற்ற கோரி போராட்டம்

தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சியில் தினமும் சேகரமாகும் குப்பை கழிவுகள், கன்னடபாளையம் கிடங்கில் கொட்டி குவிக்கப்படுகின்றன.குப்பையால் துர்நாற்றம், கொசு மற்றும் ஈக்கள் தொல்லை அதிகரித்துள்ளதோடு, தோல் பாதிப்பு, ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக, பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் தேங்கியுள்ள குப்பையை அகற்ற வேண்டும் என, பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.இதையடுத்து, கன்னடபாளையம் குப்பை, செங்கல்பட்டு அருகே ஆப்பூரில் கொட்டப்பட்டது. இதனால், குப்பை அளவு மெல்ல குறைந்து வந்தது.இந்நிலையில், கன்னடபாளையத்தில் குப்பை கொட்டும் அளவு, சில வாரங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.இதனால், அதிருப்தியடைந்த கன்னடபாளையம் மக்கள், குப்பை கொட்ட வந்த வாகனங்களை நேற்று சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த தாம்பரம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை