உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நரசிம்ம பெருமாள் கோவிலில் தெப்பம் கட்டும் பணி விறுவிறு

நரசிம்ம பெருமாள் கோவிலில் தெப்பம் கட்டும் பணி விறுவிறு

சிங்கபெருமாள் கோவில், சிங்கபெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில், பழமையான அகோபிலவல்லி தாயார் சமேத உடனுறை பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.கோவில் அருகில் சுத்த புஷ்கரணி குளம் உள்ளது. இதில் ஆண்டுதோறும் மாசி மாதம் தெப்ப உற்சவம், ஐந்து நாட்கள் விமரிசையாக நடைபெறும். உற்சவர் பிரகலாதவரதர், அலங்காரத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியருடன் தெப்பத்தில் எழுந்தருளி, குளத்தை மூன்று முறை வலம் வருவார்.இந்த ஆண்டும்,தெப்ப உற்சவம் நாளை மாலை துவங்கி ஐந்து நாட்கள் நடத்தவும், அதைத் தொடர்ந்து, ஐந்து நாட்கள் தவன உத்சவம் நடத்தவும்,கோவில் உபயதாரர்கள் மற்றும் அதிகாரிகள் முடிவு செய்தனர்.இதையடுத்து, கடந்த மூன்று நாட்களாக, மதில் சுவர் வண்ணம் பூசுதல் மற்றும் குளத்தில் புதிய தெப்பம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இதில்,10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ