உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பணியின்போது ரயிலில் அடிபட்டு ரயில்வே இன்ஜி., பலி; ஊழியர் சீரியஸ்

பணியின்போது ரயிலில் அடிபட்டு ரயில்வே இன்ஜி., பலி; ஊழியர் சீரியஸ்

பொன்னேரி, திருவொற்றியூரைச் சேர்ந்தவர் தியாகராஜன், 32. இவர், எண்ணுாரில் உள்ள ரயில்வே இன்ஜினியரிங் பிரிவில், முதுநிலை பகுதி பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டு - மீஞ்சூர் ரயில் நிலையங்களுக்கு இடையே, தண்டவாள பகுதிகளுக்கு கால்நடைகள் வருவதை தடுக்க அமைக்கப்பட்டு வரும் தடுப்புச் சுவர் பணிகளை ஆய்வு செய்யும் பணியில் நேற்று, தியாகராஜன் மற்றும் ஒப்பந்த பணியாளர் சீனிவாசன், 34, ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.மதியம் 1:00 மணிக்கு, ரயில்வே தண்டவாள பகுதியில் ஆய்வு மேற்கொண்டிருந்தபோது, சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற புறநகர் ரயில், தியாகராஜன், சீனிவாசன் மீது மோதியது.இதில், தியாகராஜன் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சீனிவாசன், பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இது தொடர்பாக, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ