உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / உத்திரமேரூர் - மதுராந்தகம் தடத்தில் இரவு நேர பேருந்து இயக்க கோரிக்கை

உத்திரமேரூர் - மதுராந்தகம் தடத்தில் இரவு நேர பேருந்து இயக்க கோரிக்கை

மதுராந்தகம்:மதுராந்தகம் பேருந்து நிலையத்திலிருந்து, தடம் எண்: டி15 மற்றும் டி14 ஆகிய இரு பேருந்துகள் மதுராந்தகத்திலிருந்து எல்.எண்டத்துார் வழியாக உத்திரமேரூர் இயக்கப்படுகின்றன.இதனால், மொறப்பாக்கம், பெரும்பாக்கம், எல்.எண்டத்துார் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் உத்திரமேரூர், காஞ்சிபுரம்பகுதிக்கு வேலைக்கு செல்வோர் என, தினமும் ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர்.இதில், தடம் எண்: டி15 பேருந்து, இரவு 7 மணிக்கு மதுராந்தகத்திலிருந்து புறப்பட்டு உத்திரமேரூர் சென்றடைகிறது.ஆனால், உத்திரமேரூரில் இருந்து 7 மணிக்கு மதுராந்தகம் செல்லும் நகர பேருந்தை தவறவிட்டால், பின் மதுராந்தகம் செல்வதற்கு, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கிடையாது என, எல்.எண்டத்துார் பகுதிவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், உத்திரமேரூரில் இருந்து இரவு நேரத்தில் மதுராந்தகத்திற்கு பேருந்து இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை