மேலும் செய்திகள்
ஜாமினில் வந்த ரவுடி கிணற்றில் சடலமாக மீட்பு
03-Sep-2024
இன்றைய மின் தடை:செங்கல்பட்டு
21-Aug-2024
படப்பை : படப்பை அடுத்த, ஆதனுார் பிரதான சாலை, மகாலட்சுமி நகரில் சாலையோர கிணற்றில் இறந்த நிலையில் ஆண் சடலம் மிதந்தது.மணிமங்கலம் போலீசார், ஒரகடம் தீயணைப்பு துறை வீரர்களுடன் இணைந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், இறந்தவர் ஆதனுார் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த ரவுடி தனசேகர், 27, என்பதும், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு, நான்கு மாதங்களுக்கு முன் ஜாமின் பெற்று வெளியே வந்த ரவுடி என்பதும் தெரிந்தது.அவரது மரணம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Sep-2024
21-Aug-2024