உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.94.96 கோடி கடன் உதவி

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.94.96 கோடி கடன் உதவி

செங்கல்பட்டு, சென்னையில், உலக மகளிர் தின விழாவில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு உதவிகளை, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக, நேற்று வழங்கினார்.இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், உலக மகளிர் தின விழா, கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது.இதில், அவர் பேசியதாவது:செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த காலங்களில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 20 கோடி ரூபாய்க்கு மேல் வங்கிகள் கடன் கொடுத்தது இல்லை.இந்த ஆண்டு, மாவட்டத்தில் 588 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கிகள் வாயிலாக, 94 கோடியே 96 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. மகளிர் குழுக்கள் சுய தொழிலில் வளர்ச்சி பெற்று, மற்றவர்களுக்கு கடன் கொடுக்கும் அளவிற்கு முன்வர வேண்டும். மாவட்டத்தில், 2024-25ம் ஆண்டிற்கு, 15 ஆயிரத்து 375 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, 1,181 கோடி ரூபாய் கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.இதில், 13 ஆயிரத்து 372 குழுக்களுக்கு, 1,054 கோடி ரூபாய் கடன் உதவி வங்கிகள் வாயிலாக வழங்கப்பட்டது. பிற மாவட்டங்களை விட, நம் மாவட்டம் முதன்மை இடத்தை பெற்றுள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் அன்பரசன், கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா, மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், காஞ்சிபுரம் எம்.பி., செல்வம், செங்கல்பட்டு தி.மு.க., -எம்.எல்.ஏ., வரலட்சுமி, திருப்போரூர் வி.சி., எம்.எல்,ஏ., பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை