உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 175 கிலோ குட்கா பறிமுதல் பீகார் வாலிபருக்கு காப்பு

175 கிலோ குட்கா பறிமுதல் பீகார் வாலிபருக்கு காப்பு

செங்கல்பட்டு:மறைமலை நகர் என்.ஹெச்., - 3, மருது இருவர் தெருவில் உள்ள வீட்டில், குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக, மறைமலை நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, அங்கு சோதனை நடத்திய போலீசார், வீட்டின் உள்ளே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ஜர்தா, மாவா பாக்கெட்டுகள், உள்ளிட்ட, 175 கிலோ புகையிலை பொருட்களையும், அவற்றை அரைக்க பயன்படுத்திய கிரைண்டர் உள்ளிட்டவற்றையும் கண்டுபிடித்தனர்.இச்சம்பவம் தொடர்பாக, போலீசார் நடத்திய விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பேரோஷ், 41, என்பவர், வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, மாவா உள்ளிட்ட பொருட்களை தயாரித்து, புறநகரில் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.இதையடுத்து, அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்த போலீசார், பேரோஷை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ