உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தாயை கொன்ற மகனுக்கு சிறை

தாயை கொன்ற மகனுக்கு சிறை

சென்னை,:வேளச்சேரி திரு.வி.க., தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 52. இவரது மகன் மூர்த்தி, 31. மதுப்பழக்கத்திற்கு அடிமையான மூர்த்தி, 2021 செப்., 19ல், குடிக்க பணம் கேட்டு, தந்தை ராமலிங்கம், தாய் லட்சுமி ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.பெற்றோர் மது குடிக்க பணம் தராததால் ஆத்திரமடைந்த மூர்த்தி, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, தாய் லட்சுமியை குத்தி கொலை செய்தார். விசாரித்த வேளச்சேரி போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து, மூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.வழக்கு விசாரணை, அல்லிக்குளம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி முன் நடந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆரத்தி பாஸ்கரன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, மூர்த்தி மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது எனக்கூறி, அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை