உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வேலை செய்த வீட்டில் திருடிய மாணவி கைது

வேலை செய்த வீட்டில் திருடிய மாணவி கைது

சென்னை, அசோக் நகர், 19வது அவென்யூவை சேர்ந்தவர் கலாவதி, 74. இவர், கல்லுாரி பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவரது கணவர் மணிக்கு, உடல்நிலை சரி யில்லாததால், அவரைகவனித்துக் கொள்ள, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பச்சையம்மாள், 18, என்பவரை, கடந்த 2024 ஏப்., மாதம்பணியில் அமர்த்தினார். பச்சையம்மாள், கல்லுாரியில் படித்துக் கொண்டே, பகுதி நேரமாக கலாவதி வீட்டில் தங்கி, வேலை செய்து வந்தார்.இந்நிலையில், கலாவதி யின் கணவர் மணி, சில மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். இதையடுத்து, பச்சையம்மாள் வேலையை விட்டு நின்றார். பின், கணவரின் வங்கி கணக்கை சரிபார்த்த கலாவதி, அதில் 10 லட்சம் ரூபாய் சிறுகச் சிறுக எடுக்கப்பட்டிருப்பதை அறிந்தார்.மேலும், பீரோவில் இருந்த, 17.5 சவரன் நகை மாயமானதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரையடுத்து, கே.கே., நகர் போலீசார் பச்சையம்மாளிடம் விசாரித்தனர்.விசாரணையில், மணியின் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, பணம்மற்றும் நகைகளை எடுத்தது பச்சையம்மாள் தான் என, தெரியவந்தது.இதையடுத்து, விழுப்புரம் மாவட்டம் மேல் மலையனுாரை சேர்ந்தபச்சையம்மாளை, கே.கே., நகர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 3.63 லட்சம் ரூபாய் பறி முதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ