உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தாம்பரம் நெஞ்சக மருத்துவமனை ரூ.8.23 கோடியில் உட்கட்டமைப்பு

தாம்பரம் நெஞ்சக மருத்துவமனை ரூ.8.23 கோடியில் உட்கட்டமைப்பு

சென்னை:தாம்பரம் நெஞ்சக நோய் மருத்துவமனையில், 8.23 கோடி ரூபாயில், கூடுதல் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில், 776 படுக்கைகள் உள்ள மறுவாழ்வு மையத்தில், 31 வார்டுகளிலும், 100க்கும் மேற்பட்டோர் உள்நேயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.இங்கு, காசநோய், எச்.ஐ.வி., - எய்ட்ஸ், நாள்பட்ட நுரையீல் அடைப்பு நோய், ஆஸ்துமா, ஒவ்வாமை, மூச்சுக்குழாய் அழற்சி, நுரையீரல் அழற்சி, நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.இங்கு ஆண்டுக்கு, 1.60 லட்சம் புறநோயாளிகள், 15,000 உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். மேலும், 4,000 எச்.ஐ.வி., நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.உலக வங்கியின் நிதியுதவியுடன், தமிழக சீரமைப்பு திட்டத்தில், 8.23 கோடி ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த மேம்பாட்டு பணிகளில், நுழைவு வளைவு, சுற்றுச்சுவர், மருத்துவமனை வளாகத்தின் உட்புற அணுகு சாலைகள், மழைநீர் வடிகால், அதிகப்படியான தண்ணீரை தேக்கி வைக்கும் தொட்டி, தீயணைப்பு ஏற்பாடுகள், மருத்துவ எரிவாயு இணைப்பு, மின்மாற்றி ஆகிய வசதிகள் செய்யப்பட உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை