உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காட்சி பொருளான கம்பம்; ஓராண்டாக மி.வா., அலட்சியம்

காட்சி பொருளான கம்பம்; ஓராண்டாக மி.வா., அலட்சியம்

மறைமலைநகர் : மறைமலைநகர் நகராட்சி 19வது வார்டு வி.ஐ.பி., நகர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மறைமலைநகர் மின்வாரிய அலுவலகம் வாயிலாக மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.கடந்தாண்டு, இப்பகுதியில் மூன்று மின் கம்பங்கள் சேதமடைந்து, சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இப்பகுதி குடியிருப்போர் நல சங்கம் சார்பில், மின் வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் மாற்றப்படாமல் இருந்தது.இதை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மின் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் குடியிருப்போர் நல சங்கத்தினர் மனு அளித்தனர். உடனே, புதிதாக மின்வாரிய ஊழியர்களால் கம்பங்கள் அமைக்கப்பட்டன.புதிய மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு ஓராண்டு ஆன நிலையில், சேதமடைந்த மின் கம்பத்தில் உள்ள மின் கம்பிகள் மாற்றப்படாமல் உள்ளது. மேலும், சேத மின்கம்பங்கள் உடைந்து விழும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக, மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. பருவ மழை நெருங்கி வருவதால், கம்பம் முறிந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், புதிய மின்கம்பங்களில் மின் கம்பிகளை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என,அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி